சத்தான கீரையைப் பற்றி முத்தான தகவல் - முருங்கைக் கீரை
என்ன சத்து?
தண்ணீர் : 63.8% புரதம் : 6.1% கொழுப்பு : 10% தாதுஉப்புக்கள் : 4% நார்ச்சத்து : 6.4% மாவுச்சத்து : 18.7%
வைட்டமின் ஏ : 11300/IU வைட்டமின் பி : 0.06 மில்லி கிராம் (தயாமின்) (100 மில்லி கிராம் கீரைக்கு) சுண்ணாம்புச் சத்து : 440 மில்லி கிராம் குளோரின் : 423 மில்லி கிராம் இரும்புச் சத்து : 259 மில்லி கிராம் ரைபோஃபிளேவின் : 0.05 மில்லி கிராம் கந்தகச் சத்து : 137 மில்லி கிராம் மாங்கனீஸ் : 110 மில்லி கிராம் நிகோடினிக் அமிலம்: 0.8 மில்லி கிராம் வைட்டமின் சி : 220 மில்லி கிராம்
முருங்கைக் கீரை 108 கலோரி சக்தியை நமக்குக் கொடுக்கின்றது...
கண்ணுக்கு மிகவும் நல்லது. மலச் சிக்கலைத் தீர்க்கும். தாது உப்புகள் இந்த
கீரையில் ஓரளவுக்கு இருப்பதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத்
தரும். எலும்பு உறுதி பெறும்.
வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால்,
அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய்,
செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன.
முருங்கைக் கீரையை
துவரம் பருப்புடன் சமைத்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1
மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும். முருங்கைக்
கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.
கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.
No comments:
Post a Comment