Thursday, 28 March 2013

விவசாயி

                            விவசாயி 

 காடு கொடுத்தான் கடவுள் 
           அதை தன் உழைப்பால் வயலாக்கினான் விவசாயி 

தானியம் தந்தான் கடவுள் 
                                  அதை மண்ணில் விதைதான் விவசாயி 

அதற்கு உயிர்  கொடுக்க மழை தந்தான் கடவுள் 
                   தன் உயிரை கொடுத்து உழைத்தான்  விவசாயி

அதற்கு பலன் கொடுத்தான் கடவுள்

ஆக மொத்தத்தில் கடவுளும் விவசாயும் வேறு , வேறு  அல்ல
          
              இருவரும் ஒன்றே 
                                  இருவரையும் வணங்குவோம்  நாமே 
                                                                                                    

Wednesday, 27 March 2013

வறட்சி, உள்நாட்டு தேவையால்...மக்காச்சோளம் ஏற்றுமதி 35 லட்சம் டன்னாக குறையும்




புதுடில்லி:நாட்டின் மக்காச்சோளம் ஏற்றுமதி, ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய உள்ள சந்தைப்படுத்தும் பருவத்தில், 3035 லட்சம் டன்னாக சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த சந்தைப் படுத்தும் பருவத்தில், இதன் ஏற்றுமதி, 48 லட்சம் டன்னாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
மகாராஷ்டிரா:மக்காச்சோளம், அதிகளவில் உற்பத்தியாகும், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், காலம் தவறிய பருவமழை மற்றும் வறட்சியால், இதன் உற்பத்தி குறையும் என, எதிர்பார்க்கப் படுகிறது.நடப்பு 201213ம் பருவத்தில், உள்நாட்டில், மக்காச்சோளம் உற்பத்தி, 210 லட்சம் டன்னாக இருக்குமென எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த பருவத்தில், இதன் உற்பத்தி, 216 லட்சம் டன்னாக இருந்தது. உள் நாட்டில், இதற்கான தேவை அதிகரித்து உள்ளது. இதனாலும், இதன் ஏற்றுமதி குறையும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
கர்நாடகா:நாட்டின் ஒட்டு மொத்த மக்காச்சோளம் உற்பத்தியில், கர்நாடக மாநிலத்தின் பங்களிப்பு அதிகமாகும். இதைத் தொடர்ந்து, ஆந்திரா (18 சதவீதம்), மகாராஷ்டிரா (12 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் உள்ளன. மேற்கண்ட மாநிலங்கள் தவிர, பீகார் மாநிலத்திலும், மக்காச்சோளம் அதிகளவில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதன் உற்பத்தியில், இந்தமாநிலத்தின் பங்களிப்பு, 7 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
தூரக்கிழக்கு நாடுகள் :இந்தியாவிலிருந்து, மக்காச்சோளம் தூரக் கிழக்கு நாடுகளுக்கே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நாடுகளில், மக்காச்சோளம், கால்நடைத் தீவனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டிலிருந்து, மக்காச்சோளம் ஏற்றுமதி, ஜூலை மாதத்துடன் நிறைவடையும். அதன்பிறகு, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து, இதன் ஏற்றுமதி அதிகரிக்கத் துவங்கும்.
அமெரிக்கா:நடப்பு 2013ம் ஆண்டில், அமெரிக்காவில், கடந்த 77 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மக்காச் சோளம் சாகுபடி, 9.78 கோடி ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த மூன்று ஆண்டுகளில், நாட்டின் மக்காச்சோளம் ஏற்றுமதி இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த 200910ம் ஆண்டில், மக்காச்சோளம் ஏற்றுமதி, 19 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்த 201112ம் ஆண்டில், 48 லட்சம் டன்னாக அதிகரித்தது

Monday, 25 March 2013

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு!

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க...

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு நீங்க...

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய....

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

* இதயத்தை வலுவாக்கும்.

* சிறுநீரைப் பெருக்கும்.

* நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

* இரத்தத்தை சுத்தமாக்கும்.

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

* தாதுவை விருத்தி செய்யும்.

* இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

வெள்ளைச் சீனியும் அதன் நச்சுத் தன்மையும்:-

இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.
இந்த வெள்ளைச் சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயாணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 செண்டி கிரேட் முதல் 70 செண்டி கிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 செண்ட் கிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாக பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசயானம் மஞ்சல் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

உங்கள் சட்டைக் கொலரொல் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதுகப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடு படும்?

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளைச் சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.