Saturday, 2 July 2016

கொய்யா

வாழைப் பழத்திற்கு அடுத்த படியாக நம்மிடையே பிரபலமானது கொய்யா தான். இதன் அருமை தெரிந்தோ, தெரியாமலோ நாம் இதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம். இதில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டால் மிகவும் அக்கறையோடு உட்கொள்வோம்.

* கொய்யாவில் உள்ள வைட்டமின் 'சி' சத்து ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகம். வைட்டமின் 'சி' சத்து உடலை ஆராக்கியமாக வைத்துக் கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கின்றது.

* கொய்யாவில் உள்ள காப்பர் சத்து ஹார்மோன்கள் சுரப்பதற்கும், செயல்படுவதற்கும் வெகுவாய் உதவுகின்றது. நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டிற்கு குறிப்பாக தைராய்டு சுரப்பி செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகின்றது.

* புற்று நோய் அபாயத்தை கொய்யா வெகுவாய் குறைக்கின்றது. கொய்யாவில் உள்ள வைட்டமின் 'சி' சத்தும், லைகோபேனும் திசுக்களை பாதுகாப்பதால் புற்று நோய் தாக்கும் அபாயம் வெகுவாய் குறைகின்றது.

* சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொய்யா. நார் சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்ட கொய்யாவை சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம்.

* கண் பார்வை சிறக்க கொய்யாப்பழமும் சிறந்ததாகும்.

* இதில் போலிக் ஆசிட், வைட்டமின் பி9 இருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொய்யாபழம் உண்ண அறிவுறுத்தப்படுகின்றது. இது குழந்தையின் நரம்பு மண்டலத்தினை நன்கு பாதுகாக்கின்றது.

* ரத்த அழுத்தத்தை சீராய் வைக்கின்றது. ரத்த உற்பத்தியைக் கூட்டுகிறது.

* கொய்யாப்பழம் உண்டால் இதில் உள்ள 'மக்னீசியம்' நரம்புகளையும், தசைகளையும் தளர்த்தி விடுவதால் மனச் சோர்வு குறையும்.

* கொய்யாவில் உள்ள நியாசின் எனப்படும் வைட்டமின் பி3, பிரிடாக்ஸின் எனப்படும் வைட்டமின் பி6 மூளைக்கு ரத்த ஓட்டம் நன்கு செல்ல உதவுவதால் மூளை சோர்வின்றி இருக்கும்.

* இதில் உள்ள வைட்டமின் சி, ஏ மற்றும் லைகோபேன், கரோட்டின் போன்றவை சரும சுருக்கங்களை நீக்குவதால் முதுமைத் தோற்றம் தள்ளிப் போகின்றது.

* கொய்யா கழிவுப் பொருட்களை நீக்கி குடல் சுத்தமாய் வைக்கும். எந்த ஒரு பழத்தையும் பழமாய் சாப்பிடுவதே நல்லது. சில வகை சமையல் குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. காயோ, பழமோ, சமைக்கும் பொருளோ நன்கு கழுவிய பிறகே அதை பயன்படுத்த வேண்டும். வெள்ளை, சிகப்பு இருவகை கொய்யாப்பழங்களுமே சிறந்ததுதான்.

கொய்யாப் பழத்தில் உள்ள சத்துக்கள் :

1 கப் கொய்யாப்பழம் சுமார் - 165 கிராம் கலோரி சத்து 112 கொழுப்பு சத்து - 2 சதவீதம்
கொலஸ்டிரால் - 0 சதவீதம்
உப்பு - 0 சதவீதம்
மாவுச்சத்து - 8 சதவீதம்
நார்சத்து - 36 சதவீதம்
புரதம் 4 கிராம்
வைட்டமின் ஏ - 21 சதவீதம்
வைட்டமின் சி - 628 சதவீதம்
கால்சியம் - 3 சதவீதம்
இரும்பு சத்து - 2 சதவீதம்

வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது...

*குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்*

*குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்*
-------------------------------------
*உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.*

*அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!*

*சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?*

*குளியல் = குளிர்வித்தல்*

*குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.*

*மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.*

*இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.*

*காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.*

*வெந்நீரில் குளிக்க கூடாது.*

*எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.*

*குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.*

*நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.*

*எதற்கு இப்படி?*
*காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.*

*நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.*

*இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.*

*குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.*

*இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??*

*உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.*

*இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.*

*எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக* *வெளியேறிவிடுகிறது.*
*வியக்கவைக்கிறதா... !*

*நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.*

*குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.*

*பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.*

*புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.*

*குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.*

*குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்*

*குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.*

*குளித்தல் = குளிர்வித்தல்*

*குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.*

*இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.*

*நலம் நம் கையில்*🙏

Sunday, 22 May 2016

அதிக லாபம் தரும் கொத்தமல் சாகுபடி

அதிக லாபம் தரும் கொத்தமல் சாகுபடி

Author: த.தேவராஜ்

First Published: Dec 29, 2011 12:00 AMLast Updated: Sep 19, 2012 10:30 PM

கடலூர் : குறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏற்ற பயிராக கொத்தமல்லி உள்ளது. கொத்தமல்லி மசாலா வகைப் பயிர்களில் முக்கியமானது. கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மருந்துப்

கடலூர் : குறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏற்ற பயிராக கொத்தமல்லி உள்ளது.

கொத்தமல்லி மசாலா வகைப் பயிர்களில் முக்கியமானது. கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இஸ்ரேலில் கண்டெடுக்கப்பட்ட கொத்தமல்லி விதைகள் 8 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

÷உலக அளவில் கொத்தமல்லி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 2009-10-ம் ஆண்டில் கொத்தமல்லி (தனியா) 3.6 லட்சம் ஹெக்டேரில் பயிரிட்டு 2.37 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் கடலூர், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் கொத்தமல்லி அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் 2008-09-ம் ஆண்டில் 14.4 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிட்டு 4.80 ஆயிரம் டன் கொத்தமல்லி (தனியா) உற்பத்தி செய்யப்பட்டது. கொத்தமல்லி சாகுபடி மொத்தப் பரப்பில் 93 சதம் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது.

ஆண்டு முழுவதும் அனைத்து பருவ காலங்களிலும் கொத்தமல்லியை கீரைக்காகச் சாகுபடி செய்யலாம் என்றாலும், தமிழகத்தில் குளிர் காலம் மற்றும் கோடைக்காலம் என்ற இரு பருவங்களில் கொத்தமல்லி பெரும்பாலும் கீரைக்காகப் பயிரிடப்படுகிறது.

÷குளிர்கால சாகுபடி டிசம்பரில் தொடங்குகிறது. மாசி, பங்குனியில் கோடை சாகுபடி செய்யப்படுகிறது. கரிசல் மண் நிலங்களில் கொத்தமல்லி பாசனப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. பல்லடம் பகுதியில் விவசாயிகள் கொத்தமல்லியில் அதிக மகசூல் எடுக்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் கொத்தமல்லி பெருமளவில் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.

விதைத்த 30 நாளில் அறுவடைக்கு வருவதால், குறுகிய காலப் பணப்பயிராக உள்ளது. இதை ஏக்கர் கணக்கில் ஒரே முறையாகப் பயிரிடாமல், 20 சென்டுகளாகப் பிரித்து 15 நாட்களுக்கு ஒரு முறை விதைத்தால், வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம். 400 கிராம் எடை கொண்ட ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. கொத்தமல்லியை பயிரிட்டு குறுகிய காலத்தில் விவசாயிகள் லாபம் பெறலாம்.

சாகுபடி முறைகள்: நிலத்தை கட்டிகள் இல்லாமல் நன்றாக உழுது சமன்படுத்திய பின்னர் பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்திகளின் பாரின் மீது வரிசையாக நேர் கோட்டில் விதைகளைப் போட்டு, மண் போட்டு மூடிவிட வேண்டும். பாரின் மேல் நீர் பாய்ச்சி வந்தால் விதைத்த 10-12 நாட்களில் முளைவிடும். நீர் பாய்ச்சிய 10-12 நாட்களில் களைக் கொல்லி (ஆக்சிகோல்ட்) அடிக்க வேண்டும். கோடை பட்ட சாகுபடியில் களைக் கொல்லிகள் தேவையில்லை.

முளைத்த 20-ம் நாள் 17:17:17 உரம் ஏக்கருக்கு 150 கிலோ இடவேண்டும். இலைவழி உரமாக 19:19:19-ஐ 30-வது நாளில் தெளிக்க வேண்டும். விதைத்த 8 நாட்களில் பழுது இல்லாமல் முளைத்து விட்டால், அறுவடையின் போது அனைத்து இலைகளும் ஒரே சீராகவும், அழகிய இலைகளாகவும் இருக்கும். பயிர் பாதுகாப்பிற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.

முறையாகப் பயிரிட்டால், ஒரு ஏக்கரில் மகசூல் 6 ஆயிரம் கிலோ கொத்தமல்லி தழை கிடைக்கும். ஒரு கிலோ விலை ரூ.10 வீதம் கணக்கிட்டால் மொத்த வருவாய் ரூ.60 ஆயிரம். சாகுபடிச் செலவு ரூ.11,600 போக லாபம் ரூ.48,400 ஆகும். ஆண்டு முழுவதும் பயிரிட்டால் வருடத்திற்கு ஹெக்டேருக்கு 5 முதல் 6 டன் வரை கொத்தமல்லி கீரை அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.

கொத்தமல்லி கீரை 50 நாள்களில் அறுவடைக்கு வரும். நாட்கள் அதிகமானால் எடை அதிகரிக்கும். எடை அதிகரிக்கும்போது விலை குறைந்துவிடும். ஆனால் 50 முதல் 55 நாள்களில் அறுவடை செய்தால் இலை நன்றாக இருக்கும். நல்ல விலை கிடைக்கும். சில்லறையாக விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும்.

கொத்தமல்லி விதை (தனியா) உற்பத்தி, கொத்தமல்லித் தழையை விட கூடுதல் வருவாய் தரும் என்று வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். மார்ச் 2012-ல் (அறுவடையின் போது) கொத்தமல்லி குவிண்டாலுக்கு ரூ.3,100 முதல் ரூ.3,300 வரை விலை நிலவும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் விலை முன் அறிவிப்பு செய்துள்ளது.

Saturday, 14 November 2015

நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க



நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.

நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு 15 மி.கி.க்கு மேல் இருக்க வேண்டும்.

சாதாரணமாக குழந்தைகள் உடலில் ரத்தத்தில் 16 முதல் 18 மில்லி கிராம், ஆண்களுக்கு 12 முதல் 14 மில்லி கிராம், பெண்களுக்கு 10 முதல் 14 மில்லி கிராம் "ஹீமோகுளோபின்' இருக்க வேண்டும்.

10 மில்லி கிராமுக்கு கீழ் ரத்தத்தில் "ஹீமோகுளோபின்' அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள்.

அதற்க்கு ஒரு சிறந்த வழி உள்ளது. நாட்டு நெல்லிகாய்(பெரிய நெல்லிக்காய்) ஒன்று எடுத்து அதில் சிறு சிறு துளை இட்டு நல்ல தேனில் ஓர் இரவு ஊர விட்டு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும். ஆரோக்கியமாக இருக்கலாம்.

நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி.

1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.

உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.

வைட்டமின் "பி' நிறைந்த பேரீச்சம்பழம், இரும்பு சத்து அதிகமான உணவு பொருட்களை கட்டாயம் சாப்பிட வேண்டும். 10 மில்லி கிராம், அதற்கு குறைவாக 9.5 அல்லது 9.8 இருந்தால் மாத்திரை மூலம் சரி செய்து விடலாம். ஒன்பதுக்கு கீழ் குறைந்தால் ரத்தத்தில் "ஹீமோகுளோபின்' அளவு அதிகரிக்க டாக்டர்கள் கூறும் ஊட்டச்சத்தான உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும். இவ்விஷயத்தில் கர்ப்பிணிகள் மிக கவனமுடன் இருக்க வேண்டும்.

உடனடியாக இரத்த சோகையை நீங்க

நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப் பிரித்து உட்கொள்ள வேண்டும்.
ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து (பா‌ல், த‌ண்‌ணீ‌ர்) சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.

மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு.

தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும்.

அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும்.

தக்காளிச்சாறு, எலுமிச்சை சாறு, தேன் இவை மூன்றையும் சம அளவு கலந்து காலை, மாலை இரு வேளையும் 30 மில்லி அளவு குடித்து வர ரத்தம் பெருகும்,

இந்த முறையைப் பின்பற்றி வந்தால் இதயம் வலுவடையும். கல்லீரல் பலம் பெறும். இது காசநோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.

இத்தகைய ரத்தச் சோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்புச் சத்துள்ள கீரைகளான, முருங்கைக்கீரை, ஆரைக் கீரை, அரைக்கீரை, புதினா கொத்தமல்லி, கறிவேப்பிலை அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகளையும், திராட்சை, பேரீச்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது. இதனால் ரத்தம் விருத்தி அடைந்து, ரத்தச் சோகை நீங்கும்.

மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுந்தங்களி, பாதாம், பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது. பெண் குழந்தைகள் பருவ வயது வரையும் அதற்கு பின்பும் மேற்கண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை நீங்கும்.
இர‌த்த சோகை‌ எ‌‌ன்றது‌ம், பல வகையான மா‌த்‌திரைகளை முழு‌ங்‌கி வருவா‌ர்க‌ள். ஆனா‌ல் அத‌ற்கு இய‌ற்கை‌யி‌ன் வர‌ப்‌பிரசாதமான தே‌ன் தா‌ன் ‌நிர‌ந்தர ‌தீ‌ர்வை அ‌ளி‌க்கு‌ம் மரு‌ந்தாகு‌ம்.

த‌க்கா‌ளி‌ச்சாறு, எலு‌மி‌ச்சை சாறு, தே‌ன் இவை மூ‌ன்றையு‌ம் சம அளவு கல‌ந்து காலை, மாலை இரு வேளையு‌ம் 30 ‌மி‌ல்‌லி அளவு குடி‌த்து வர ர‌த்த‌ம் பெருகு‌ம், இ‌ந்த முறையை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி வ‌ந்தா‌ல் இதய‌ம் வலுவடையு‌ம். க‌ல்ல‌ீர‌ல் பல‌ம் பெறு‌ம். இது காசநோயா‌ளிகளு‌க்கு ‌மிகவு‌ம் ‌சிற‌ந்தது. த‌க்கா‌ளியை ‌தினமு‌ம் ப‌ச்சையாக உ‌ட்கொ‌ண்டு வர ‌சிறு வய‌திலேயே ஏ‌ற்படு‌ம் முக‌ச் சுரு‌க்க‌ங்க‌ள் குணமாகு‌ம், சொ‌ரி, ‌சிர‌ங்குகளு‌ம் ‌தீரு‌ம். த‌க்கா‌ளியை ப‌ச்சையாகவோ, சமை‌த்தோ சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌த்தை சம‌ப்படு‌த்து‌ம். மல‌ச்‌சி‌க்கலை‌ப் போ‌க்கு‌ம்.. த‌க்கா‌ளியை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் உட‌ல் உ‌ள் உறு‌ப்புக‌ள் பல‌ம் பெறு‌ம்.

Monday, 15 June 2015

உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?

இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்து விட்டு நண்பர்களுடன் பகிரவும். நன்றி. 1. இன்ஷூரன்ஸ் பாலிசி....யாரை அணுகுவது..? --------------------------------------------------------------------------- பாலிசியை விநியோகம் செய்த கிளையை. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல். எவ்வளவு கட்டணம்? ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும். நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போனவிவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும். 2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி மற்றும் கல்லூரி) யாரை அணுகுவது..? ------------------------------------------------------------------------------------- பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது. எவ்வளவு கட்டணம்? உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505. கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள். நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும். 3.ரேஷன் கார்டு! யாரை அணுகுவது..? ---------------------------------------------------------- கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை எவ்வளவு கட்டணம்? புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும். கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும். நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும். 4.டிரைவிங் லைசென்ஸ்! யாரை அணுகுவது? ----------------------------------------------------------------------- மாவட்டப் போக்குவரத்து அதிகாரி. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண். எவ்வளவு கட்டணம்? கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்). கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம். நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும். 5.பான் கார்டு! யாரை அணுகுவது..? --------------------------------------------------- பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்? அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய். கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள். நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். 6.பங்குச் சந்தை ஆவணம்.....! யாரை அணுகுவது? ----------------------------------------------------------------------------- சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும். கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள். நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும். 7.கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..? ----------------------------------------------------------- பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய். கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும். நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும். 8.டெபிட் கார்டு!யாரை அணுகுவது..? -------------------------------------------------------- சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? கணக்குத் தொடர்பான விவரங்கள். எவ்வளவு கட்டணம்? ரூ.100. கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள். நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும். 9 மனைப் பட்டா! -------------------------- யாரை அணுகுவது..? வட்டாட்சியர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.? நகல் பட்டா கோரும் விண்ணப்பம். எவ்வளவு கட்டணம்? ரூ.20. கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும். நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும். 10. பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..? ----------------------------------------------------------- மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம். எவ்வளவு கட்டணம்? ரூ.4,000. கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும். நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டு பிடிக்கப்படவில்லைஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள். 11. கிரெடிட் கார்டு! --------------------------- கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். யாரை அணுகுவது? நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள். எவ்வளவு கட்டணம்? ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்). கால வரையறை: 15 வேலை நாட்கள். நடைமுறை : தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும். Courtesy :விகடன்